Pages

Showing posts with label Tamilian. Show all posts
Showing posts with label Tamilian. Show all posts

Monday, June 8, 2009

நியாயத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை!!!

நியாயத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை …..


உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே ........ இவன் பகத்சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது . படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி .

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங் . குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை ( அம்பை எய்தியவனை - Michael O'Dwyer ) பழி வாங்க துடிகிறான் . ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான் . ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று .

துவள வில்லை உதம் சிங் , அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான் . இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார் . ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல ... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான் . மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து ( Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்Smiling Udham leaving the Caxton Hall after his arrest



மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து ... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள் . இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 ௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார் .

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது . அவருடைய உடல் பிரதமர் , ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள் .

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம் ..................

400 ௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம் .....
Colombo, 1987: The then Indian prime minister, Rajiv Gandhi, ducks a rifle butt attack by a Sri Lankan naval rating during a guard of honour, after he signed a controversial peace pact with the Colombo government

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400 ௦௦ பொது மக்களை மற்றும் 800 ௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா ?

“ ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது ”
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால் .....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே ) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும் ..... வந்தது .

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா ?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம் ... நாம் செய்தால் தியாகி பட்டமா ?

நல்ல நியாம்டா சாமி .............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு , இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது .......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது .....

Bhagat Singh at the age of 21

'' ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார் .. இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன் , யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது . இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன் , விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார் .

ஆனால் ரன்பீர் சிங்கோ , ' இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன் . அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம் . அந்த விருதை நீ வாங்கினால் , நமக்குள் எந்த உறவும் இருக்காது ' என்று சொல்ல ...

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார் ! ''


ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே ...... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன் ?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது ................


மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன் ........................



1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார் . அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh . அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள் .

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார் ...... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான் . சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள் !!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது .....

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா ? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன் ?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது தனுதானே ?

தனுதான் அப்பொழுதே இறந்து விட்டாலே ...

அதோடு தனு கூட இருந்த ஐந்து பேரும் ( ஒற்றை கண் சிவராசன் – உட்பட ) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன் ?

இந்த வழக்கில் மேலும் நளினி , பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன் ?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன் ? ??

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம் ........ (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது ..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள் ?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் ____ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை ..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது , தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம் .........

அட நாய்களே .....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை …..
இந்தியனாக இருக்க தேவை இல்லை …..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும் .....


இப்படிக்கு ,
மனிதர்
இந்தியர்
தமிழர்

பின்குறிப்பு: இணையத்தில் சுட்டது...

Wednesday, April 8, 2009

Hitler Re-born



Mahinda RajapakseSrilankan President




I really don’t like to publish these pictures………

But I don’t have any option or choice to prove

What happening in SriLanka ………………………




Srilankan Army Shelled in Civilian Place



Srilankan Army attacked hospital last month…..



What this child did?

This child spoke Tamil language that’s the only reason Srilankan Army did like this

Is this acceptable?

None of the Indian or International news papers displaying the news

Desperately they are hiding the news………….


Jan’09 - Srilankan Army attacked civilan people in Moongilaru, Srilanka



Almost 10 children are killed in this attack... Who is going to question Srilanka ?

What this child did?

only one wrong thing is, this child is Tamil child


Pregnant women brutally killed by Srilankan Army…………

This is the world worst deadliest attack……. 8 month foetus also killed


A pregnant women killed by Srilankan army on 17-March-2009 (Baby Child inside her body)

.
.
.
.
.
.
.
.
.
.




Where is the Head?

Just 13 year old school student





What is the use of UN?





From 01-Jan-2009 to 30-March-2009……………………………………………………..

3812 innocent Tamil people killed by Srilankan Army it includes more than 900 children.

UN report says….. Every day 42 Tamil people are killed by Srilankan Army……

They are their own citizens………………………………………………………………….



Srilankan government not allowed UN and ICRC members in Vanni (Tamil place in Srilanka)

They want to hide the news from the entire world….. Planned and Perfect GENOCIDE

Please be aware about what is happening in Sri Lanka...

Rajapaksey & Co




Some people may think this is internal problem of a country....... why we should worry about?

Definitely we should worry because,

When innocent people are killed for no reason by their own government any where in the world as a human being with some humanity

We should raise a voice against genocide

If it is an internal problem or war means why we studied about Hitler in our history book.

The Aim is the future generation should not repeat the same mistake again.

I m not willing my Children’s to read this SriLanka Tamil Genocide as a history chapter.

So please try to understand and please forward ...............



Booker prize winner – Arundhathi Roy statement about Srilankan Issue


http://timesofindia.indiatimes.com/articleshow/4331986.cms


Courtesy: Santhiya Ganesan & Senthil

Thursday, October 16, 2008

ஓரு நிமிடம்...

உண்ண உணவில்லை.
தலைமேல் எப்பொழுது குண்டு விழுமெனத் தெரியவில்லை.
ஊரைவிட்டு, பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, ஆடு கோழி நாய்களுடன் கிடைத்த சாமான்களை அள்ளிக் கொண்டு பிஞ்சுக் குழந்தைகள் முதல் கோலூன்றி நடக்கும் முதியவர் வரை..

கூட்டம் கூட்டமாக..சொந்த நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயரும் மக்கள்.
மழைக்காலம். போதுமான சுகாதார வசதிகளின்றி கூட்டமாக ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்.
எந்த நேரமும் தொற்று நோய் பரவும் ஆபத்து. பரவினாலும் சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை.
கொத்து கொத்தாக விழும் சாவுக்கு நடுவே வாழ்வைத் தேடும் அவலம்.
இத்தனையும் போதாதென்று..

தாயாய் அரவணைக்க வேண்டிய நாடே கொல்ல ஆயுதமும் கற்றுக் கொடுக்க ஆளும் அளிக்கிறது.
அதைக் கொண்டு தன் மக்களை மட்டுமல்லாது.. ஆயுதம் கொடுத்த நாட்டின் மக்களையே சுட்டுக் கொல்கிறான்...
இவை எல்லாம் எங்கோ கண்காணாத் தொலைவில் நடக்கவில்லை. இதோ நமக்கு மிக அருகில்..
அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் மக்கள்..

உற்ற துணையாய் எண்ணியிருக்கும் தமிழகத்தில் கீற்றாய் நம்பிக்கை ஒளி.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் போராட்டம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக முடிவு.
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
விவசாயிகள், தொழிலாளர்கள் ஏன் திரையுலகத்தினர் வரை அனைவரும் பல்வேறு வகைகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
தமிழகமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் ஆதரவு கண்டு கண் கலங்கி கைக்கூப்பி நன்றி சொல்கின்றனர்.
ஆனால்.. இந்த சமூகத்திலேயே மிக அதிக வருமான வரம்பில் இருக்கும் அய் டி மக்கள் மட்டும்..
அறிவு தளத்தில் சமூகத்தின் உச்சத்தில் நிற்பதாகச் சொல்லப்படும் நம் துறையினர் மட்டும்..
சமூகத்தின் அத்தனை நலன்களையும் பிறரை விட அதிகமாக அனுபவிக்கும் நாம் மட்டும்..
அதனாலேயே சொகுசுக் கண்டு சமூகத்தில் பிறரிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கும் நாம் மட்டும்..
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.
யார் எங்கு செத்தால் நமக்கென்ன.
ஈழப் பிரச்னை மட்டுமா? நாட்டில் எந்த பிரச்னை நடந்தாலும்..
தொடர்பற்ற பார்வையாளர்களாக மட்டும்..
இன்று பங்குச் சந்தையின் நிலவரம் என்ன? டாலர் நல்ல விலைக்குப் போகிறதா இல்லையா?
இன்றைய இணைய அரட்டை யாருடன்? சாப்பாடு பீட்சா கார்னரிலா சப் வேயிலா? வாரக் கடைசியில் தூக்கமா சினிமாவா? இவற்றைத் தவிர வேறு சிந்தனையின்றி..
மிஞ்சிப் போனால் 'எல்லாரும் ஸ்டண்ட் அடிக்கிறாங்கப்பா' என்று கமெண்ட் அடித்ததோடு நம் கடமை முடிந்து விட்ட களிப்பில்.. சக மனிதனின் சாவை குறித்த அக்கறை சிறிதும் இன்றி..

அதைப் பற்றி சிறிதளவுக் கூட குற்ற உணர்ச்சியும் இன்றி.. வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறோம். உணர்ச்சியற்ற பிணங்களாக.
கம்யூட்டரோடு மட்டுமே உறவாடி மனிதத்தன்மை அற்று போய்விட்டதா நமக்கு ?
சுனாமி வந்த போது ஓடோடிச் சென்ற அய் டி மக்களை நான் அறிவேன்.
ஆங்காங்கே சில நல்ல இதயங்களோடு இணைந்து தங்கள் வார இறுதிகளை பிறருக்கு பயனளிக்கும் வகையில் செலவிடும் அய் டி மக்களையும் எனக்குத் தெரியும்.
ஆனால்..
அவை எத்தனை விழுக்காடு?
இந்த சமூகத்தின் வளங்களில் மிக அதிகப் பங்கை எடுத்துக் கொள்ளும் நாம் அதற்கு இணையாக சமூகத்திற்கு செலுத்துகிறோமா?
யோசியுங்கள் நண்பர்களே..

வாழ்க்கை உன்னதமானது.. நமக்கு மட்டுமல்ல.. இவ்வுலகில் வாழும் அனைவருக்கும்.
நம்புங்கள்! நம்மைத் தாண்டியும் உலகம் பரந்து விரிந்து இருக்கிறது!!!!! அதில் இன்பங்களோடு நாம் கற்பனை செய்து பார்க்கவும் இயலாத துன்பங்களும் இருக்கின்றன!
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிலருக்கேனும் நம்மால் உதவ முடிந்தால்.. அதைவிட வாழ்வை உன்னதப்படுத்தும் விசயம் வேறு இருக்க முடியாது!!
அது அளிக்கும் மன நிறைவை.. அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கிய வீடோ, வெளிநாட்டு காரோ நிச்சயம் தர முடியாது.
நன்றி,
அன்புடன்,
உங்களில் ஒருவன் (A Friend)...
-------------------------------------------------------------------
Forward to your friends, let them know what is happening for Tamilian at Eelam, Srilanka.