Pages

Friday, July 29, 2011

கடவுளுக்கு ஒரு கடிதம்!



கடவுளுக்கு ஒரு கடிதம்!

அன்புள்ள கடவுளுக்கு!

நான் இங்கு நலமில்லை. நீ அங்கு நலமாக இருப்பாய் என்று நினைக்கிறேன்.

இங்கு உன் பெயரில் ஒரு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. சிலர் நீ இந்து என்றும் , சிலர் நீ முஸ்லீம் என்றும், வேறு சிலர் நீ கிறிஸ்தவன் என்றும், மற்றும் பலர் நீ வேறு பிற மதத்தை சேர்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். இதனால் பல வாதங்களும், குழப்பங்களும், பிரச்சனைகளும், வெட்டு குத்து என்று கொலைகளும், கொடுமைகளும் கூட நடக்கின்றன.

ஒவ்வொருவரும் நீ தன் மதத்தை சேர்ந்தவன் என்று நிரூபிப்பதற்காக நீ வேறு மதக்காரன் என்று நம்புவனை அழிக்க பார்கிறார். அவர்கள் ஆக்கியதையும் அழிக்க பார்கிறார். நீ ஒரே ஒரு முறை வந்து நீ எந்த மதம் என்று சொல்லி விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்து விடும். அதனால் உன்னை வர சொல்வதற்க்காக தான் இந்த கடிதத்தை எழுதினேன்.

ஆனால், இப்போது தோன்றுகிறது, நீ ஒரு வேளை வந்தால், உன்னை இன்னொரு மதக்காரனாக்கி அந்த மதக்காரர்கள் இந்த மதகாரர்களுடன் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் தயவு செய்து இப்போது நீ இங்கு வருவதாக எதாவது எண்ணம் இருந்தால் மாற்றி கொள்ளவும்.

இங்கு இப்போது இருக்கும் நிலைமையில் உன்னை, கடவுள் என்று தன்னை சொல்லி கொள்ளும் பலருள் ஒருவன் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அதனால் இப்பொது வராமலிருப்பதே உனக்கு நல்லது!


பி.கு. இன்னும் நினைக்க முடியாத பல கொடுமைகள் இங்கு நடக்கிறது. நீ பத்திரமாக இரு. மற்ற விவரம் அடுத்த மடலில்.

நன்றி - மௌனமான நேரம்!!!

1 comment:

காந்தி பனங்கூர் said...

கடவுள் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை மிக எளிமையாக சொல்லியிருக்கீங்க. அருமையான பதிவு நண்பா. வாழ்த்துக்கள்.